வின்செஞ்சோ கலிலீ
- இக்கட்டுரை கலிலியோ கலிலீயின் த்தையாரைப் பற்றியதாகும். கலிலியோவின் மகனைப் பற்றி அறிய, காண்க வின்செஞ்சோ காம்பா.
வின்செஞ்சோ கலிலீ (Vincenzo Galilei) (1520 - 2 ஜூலை 1591) ஓர் இத்தாலிய யாழ் வல்லுனரும் பாடலாசிரியரும் இசைக் கோட்பாட்டாளரும் ஆவார். இவர் புகழ்மிகு அறிவியலாளரான கலிலியோ கலிலீயின் தந்தையார் ஆவார் of the lute virtuoso and composer Michelagnolo Galilei. இவர் பிந்தைய மறுமலர்ச்சிக் கால இசை வாழ்க்கையில் முதன்மையான ஆளுமையாவார். இவர் இசையில் பெரும்புரட்சி செய்தவர். பரோக் இசையூழியை தொடங்கி வைத்தவர்.
வின்செஞ்சோ உரப்பு, நாண் இழுப்பு உறவில் நேரிலா சமன்பாட்டை இசை வரலாற்ரிலேயே முதன்முதலாக விவரித்து விளக்கியவர் ஆவார்.[1] இது பித்தகோரிய மரபின் விரிவாக்கம் ஆகும். மேலும் அம்மரபைக் கடந்து முன்னேறியதுமாகும். இவர் தன் மகனைத் தனி நுண்ணிலைக் கணிதமுரையில் இருந்துச் செய்முறைத் தடத்தை நோக்கிச் செல்லவும் அதன் முடிவுகளைக் கணிதவியல் விவரிப்பால் விளக்கவும் வழிப்படுத்தியவராக பல அறிஞர்கள் கருதுகின்றனர். இது குறிப்பாக இயற்பியலிலும் பொதுவாக இயற்கை அறிவியலிலும் ஏற்பட்ட புதிய திருப்பம் ஆகும்.
வாழ்க்கை
[தொகு]இவர் தசுக்கனியில் உள்ள சாந்தா மரியா அமாந்தேயில் 1520 இல் பிறந்தார்.[2] இவர் இளமை முதலே யாழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 1562ஆம் ஆண்டுக்கு முன் இவர் பிசா நகருக்கு இடம்பெயர்ந்துள்ளார். அங்கு ஒரு கனவான் (பிரபுக்) குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார். 1564 இல் எழுவரில் அல்லது அறுவரில் ஒருவராக கலிலியோ பிறந்துள்ளார் ; இவரது அடுத்த மகனாக 1575 இல் மைக்கிளனோலோ கலிலீ பிறந்துள்ளார்.[3]இவரும் சிறந்த யாழிசை வல்லுனரும் பாடலாசிரியரும் ஆவார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Cohen, H. F. (1984). Quantifying Music: The Science of Music at. Springer. pp. 78–84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-277-1637-4.
- ↑ brunelleschi.imss.fi.it website [Retrieved 2011-12-02] copyrighted to museogalileo.it(Museo Galileo)
- ↑ Fabris, D. © Copyright 1988 - 2011 - Astronomical Society of the Pacific aspbooks.org website article citing Vincenzo Viviani [Retrieved 2011-12-02] originally located at adsabs.harvard.edu website
மேற்கோள்கள்
[தொகு]- Claude Palisca: "Vincenzo Galilei", Grove Music Online, ed. L. Macy (Accessed March 7, 2007), (subscription access)பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம்
- Article Vincenzo Galilei, in The New Grove Dictionary of Music and Musicians, ed. Stanley Sadie. 20 vol. London, Macmillan Publishers Ltd., 1980. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56159-174-2 [Retrieved 2004-05-27]
- [see also: galileo.rice.edu Retrieved 2011-12-01]
- Gustave Reese, Music in the Renaissance. New York, W.W. Norton & Co., 1954. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-09530-4
- The Concise Edition of Baker's Biographical Dictionary of Musicians, 8th ed. Revised by Nicolas Slonimsky. New York, Schirmer Books, 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-872416-X [Retrieved 2004-05-27]
வெளி இணைப்புகள்
[தொகு]- வார்ப்புரு:IMSLP
- Free scores by வின்செஞ்சோ கலிலீ in the Choral Public Domain Library (ChoralWiki)
- Free scores at the Mutopia Project
- Books by Vincenzo Galilei
- Dialogo di Vincentio Galilei ... della musica antica, et della moderna (published by Giorgio Marescotti, 1581)
- Fronimo Dialogo